Apr 02

மாகாணங்கள் சுயாதீனமாக செயற்பட இடமளிக்கப்பட வேண்டும்;கலாநிதி ஜயம்பதி

மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் பகிரப்படும் நிலையில் குறிப்பாக மாகாணங்கள் சுயாதீனமாக செயற்பட இடமளிக்கப்பட வேண்டும் அரசியலமைப்பு நிபுணரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் எம்.பியுமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும். மாகாண எல்லைக்குள் தமக்கான அதிகாரங்களை பயன்படுத்த அனுமதிப்பது மாகாணங்களில் சுயாதீனத்தை உறுதிப்படுத்தும் வகையில் அமையும்.

எனினும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் மாகாணங்களை இவ்வாறு செயற்பட அனுமதிக்க முடியும். சில சந்தர்ப்பங்களில் மாகாண சபைகள் பிரிவினையினை பலப்படுத்தும் வகையில் அமையுமாயின்   அல்லது தனித்து செயற்பட ஆரம்பிக்குமாயின் மத்திய அரசின் நேரடியான தலையீட்டில் மாகாணங்களை கலைக்கவும் அரசி ல் அமைப்பில் ஏற்பாடு வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.