Aug 11

யுத்தத்தை காரணம் காட்டி கனடாவில் வதிவிட உரிமை பெற்ற இலங்கையருக்கு சிக்கல் !

இலங்கையின் யுத்தத்தைக் காரணம் காட்டி கனடாவில் அகதி அந்தஸ்த்தும் பின்னர் நிரந்தர வதிவிட உரிமையும் பெற்றுக் கொண்ட இலங்கை ஒருவரை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

நிஷ்ரீன் நிலாம் என்ற குறித்தநபர், இலங்கையில் தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து 2009ஆம் ஆண்டு கனடாவின் அகதி அந்தஸ்த்து கோரியுள்ளார்.

பின்னர் அவருக்கு கனடாவின் நிரந்தர வதிவிட அந்தஸ்த்து வழங்கப்பட்ட நிலையில், தமது இலங்கை கடவுச் சீட்டைப் பயன்படுத்தி இரண்டுதடவைகள் இலங்கை வந்து மீண்டும் கனடா சென்றுள்ளார்.

இதன்மூலம் அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என்பது உறுதியாகியுள்ள நிலையில், அகதி அந்தஸ்த்துக்கான சட்டத்திட்டங்களை அவர் மீறி இருப்பதாக தெரிவித்து, கடனாவின் குடிவரவுத்திணைக்களம் வழக்குத் தொடர்ந்துள்ளது.

இந்த நிலையில் அவரது நிரந்தர குடியுரிமைக்கான விண்ணப்பத்தையும் குடிவரவுத்துறை அமைச்சு இடைநிறுத்தி வைத்துள்ளது.

இதற்கு எதிராக அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், நேற்றும் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று, ஒத்திவைக்கப்பட்டுள்ளது