Apr 02

இலங்கை பங்களாதேஷ் தொடர் சமநிலையில்

இலங்கை  பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான  மூன்று போட்டிகள் கொண்ட  ஒரு நாள் கிரிக்கெட்  தொடர் சமநிலையில் நிறைவடைந்தது.

இரு அணிகளுக்குமிடைலான மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்று கொழும்பு எஸ்.எஸ்.சி விளையாட்டரங்கில் நடைபெற்றது.

நாணயச்சுழ்ற்சியில் வெற்றி பெற்ற  பங்களாதேஷ் அணி  முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு குணதிலக்க(34), உபுல் தரங்க(35) 

குஷால் மெண்டிஸ்(54) , திசார பெரேரா(52) பெற்றுக்கொடுக்க இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 280 ஓட்டங்களைப் பெற்றது.

பங்காள தேச அணி சர்hபில் மோர்ட்டஸா 3 விக்கெட்டுக்களையும், முஷ்தாபிர் ரஹ்மான் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்கள்.

பதிலுக்கு தொடரைக் கைப்பெற்றும் இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷுக்கு தமீம் இக்பால் (4), சபீர் ரஹ்மான் (0), முஷ்பிகுர் ரஹிம் (0) சௌமியா சர்கர் (38) சாஹிப் அல் ஹசன் (54) மொசாடெக் ஹொசைன் (09), மெஹ்முதுல்லா (07) மெஹதி ஹசன் மிராஸ் (51) பெற்ற நிலையில் 44.3 ஓவரில் 210 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அவ்வணி சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் குலசேகரா 4 விக்கெட்டுக்களையும் லக்மால், தில்ருவான் பெரேரா மற்றும் பிரசன்னா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்கள்.

இதனால் இலங்கை அணி 70 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. திசார பெரேரா ஆட்ட நாயகன் விருதையும், குசால் மெண்டிஸ் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர்.