Apr 01

மொசூல் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்; ஐ.நா. பொதுச் செயலாளர்

மொசூல் நகரில் இருந்து வெளியேறும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் என்று வல்லரசு நாடுகளுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ கட்டாரஸ் அழைப்பு அழைப்பு விடுத்துள்ளார்.

மொசூல் நகருக்கு வெளியே உள்ள முகாம்களை கட்டாரஸ் இன்று பார்வையிட்டார்.

மொசூல் மக்களுக்கு உதவி செய்ய எங்களிடம் போதிய பொருள் வசதி இல்லை. 8 சதவீதம் தான் பொருள்வசதி உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மேற்கு மொசூல் நகரில்சண்டை காரணமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 3 லட்சத்து 55 ஆயிரம் பொதுமக்கள் மொசூல் நகரில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

அவர்களுக்கு ஈராக் அரசு முகாம்கள் அமைத்து தங்கவைத்துள்ளது. இன்னும் 4 லட்சம் பேர் மொசூல் நகரில் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.