Apr 01

செல்பி எடுக்க முயன்றவரைக் கடித்தது குதிரை

குதிரையுடன் செல்பி எடுக்க முயன்ற நபரை அந்த குதிரை கடித்து காயப்படுத்திய சம்பவம் கேரளா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் சாஜித்(வயது 37). நேற்று மாலை 7 மணியளவில் இவர் அப்பகுதியில் உள்ள பய்யம்பலம் கடற்கரையில் நின்று தன்னைத்தானே செல்பி எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது அங்கிருந்த குதிரையின் முன்னால் நின்று செல்பி எடுத்துக்கொள்ள சாஜித் விரும்பியுள்ளார். தனது ஆசைப்படி குதிரை முன்னால் சாஜித் செல்பி எடுக்க முயன்றபோது, குதிரை அவரை கடித்துள்ளது. 

இதனைக்கண்ட அவரது நண்பர்கள் வேகமாக ஓடிவந்து குதிரையின் வாயிலிருந்து சாஜித்தைக் காப்பாற்றி அருகிலிருந்த மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர்.