Apr 01

ஈராக் படை வான்வழியாக தாக்குதல் நடத்தியதில் 150ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி

சிரிய எல்லையில் உள்ள பாஜ் நகரில் முகாமிட்டுள்ள ஐ,எஸ் தீவிரவாதிகளை குறிவைத்த அரச படையினர் இன்று நடத்திய வான்வெளி தாக்குதலில் சுமார் 150க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


கொல்லப்பட்ட தீவிரவாதி்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் எனவும், தீவிரவாதிகளை குறிவைத்து வான்வெளி தாக்குதல் தொடரும் எனவும் அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் வசமிருந்த முக்கிய நகரமான மொசூல் நகரை கடந்த வாரத்தில் மீட்ட ஈராக் மற்றும் அமெரிக்கா நாடுகள் இணைந்த படையினர், தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.