Apr 01

இந்தியாவின் மிக நீண்ட சுரங்கப் பாதை நாளை திறப்பு

காஷ்மீர் மாநிலத்தில் ஜம்முவையும் காஷ்மீரையும் இணைக்கும் வகையில் செனானி மற்றும் நஷ்ரி இடையே மலைப்பகுதியில் 9.2 கி.மீ. தூரத்துக்கு சுரங்கம் அமைத்து பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இதுதான் இந்திய நாட்டிலேயே மிக நீளமான சுரங்கப்பாதை ஆகும்.இந்த திட்டத்துக்கு 2011ஆம் ஆண்டு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அடிக்கல் நாட்டினார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணிகள் முடிந்து போக்குவரத்துக்கு விட திட்டமிட்டு இருந்தது.ஆனால் பல காரணங்களால் பணிகள் தடைபட்டன. தற்போது பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடி நாளை இந்த சுரங்கப்பாதையைத் திறந்து வைத்து நாட்டு மக்களிடத்தில் கையளிக்கவுள்ளார்.