Apr 01

ஆறு மாதங்களில் தேசிய அரசாங்கம் முறிகிறதா?

எதிர்வரும் ஆறு மாதங்களில்  இனப்பிரச்சினைக்கான தீர்வையும்  தேர்தல் முறை மாற்றத்தையும்   அடைந்து கொள்ள முடியாவிடின் ஐக்கிய தேசியக்கட்சியுடனான தேசிய அரசாங்கத்தில்  அங்கம் வகிப்பதில் அர்த்தமில்லை. 

 

இந்த  இரண்டு விடயங்களையும்  அடைந்துகொள்ள முடியாவிடின்  தேசிய அரசாங்கத்தை முறித்துக்கொள்வதே நன்றாக இருக்கும் என்று  சுதந்திர கட்சியின் பேச்சாளரும்,  இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா  தெரிவித்தார்.  


எவ்வாறெனினும் எதிர்வரும் ஆறு மாதங்களில்  தேர்தல் முறை மாற்றத்தையும் முன்னெடுத்து  இனப்பிரச்சினைக்கு தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியும் என நம்புவதாகவும்  அவர் குறிப்பிட்டார்.