Aug 10

1Gbps வேகத்தில் 100 ஜிபி டேட்டா ரூ.500 மட்டுமே: தீபாவளி முதல் ஜியோ ஃபபைர் அறிமுகம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவைகள் கடந்த சில மாதங்களாக சோதனை செய்யப்பட்டு வருவதைத் தொடர்ந்து இந்த ஆண்டு தீபாவளி முதல் ஜியோ ஃபபைர் துவங்கப்பட இருக்கிறது.ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகளை வெளியீட்டைத் தொடர்ந்து ஜியோ ஃபைபர் எனும் பிராட்பேண்ட் சேவைகளை ஜியோ சோதனை கடந்த ஆண்டு முதல் சோதனை செய்து வருகிறது.

இந்தியாவில் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் ஜியோ ஃபைபர் சேவைகள் இந்த ஆண்டு தீபாவளி முதல் வெளியிடப்படும் என ஜியோ நிறுவன தலைவர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள இஷா அம்பானி இதை உறுதி செய்யும் வகையில் ட்வீட் செய்துள்ளார். 

ஜியோ 4ஜி சேவைகளை போன்றே பிராட்பேண்ட் கட்டணங்களும் மிகவும் மலிவு விலையில் வழங்கப்படும் என ட்விட்டரில் இஷா அம்பானி குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் 1Gbps வேகத்தில் 100 ஜிபி டேட்டாவின் விலை ரூ.500 என நிர்ணயம் செய்யப்படும் என்றும் முதற்கட்டமாக 100 நகரங்களில் இந்த சேவை துவங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் ஜியோ ஃபைபர் சேவைகள் சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்திருந்தது. அதன்படி ஜியோ ஃபைபர் முதற்கட்டமாக டெல்லி, ஆமதாபாத், ஐதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா, மும்பை, சூரத், வதோதரா மற்றும் விசாகப்பட்டினம் உள்ளிட இடங்களில் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. 

மேலும் இந்த சேவை மூன்று மாதங்களுக்கு 100 ஜிபி டேட்டாவினை 100Mbps வேகத்தில் வழங்கும் என்றும் குறிப்பிடப்பட்டது. மேலும் 100 ஜிபி அளவை பயன்படுத்தியதும் டேட்டா வேகம் 1Mbps ஆக குறைக்கப்படும் என கூறப்பட்டது. இத்துடன் ஜியோ ஃபைபர் சேவைகளுடன் கஸ்டம் ரவுட்டர், பொருத்துவதற்கான கட்டணம் மற்றும் திரும்ப பெறக் கூடிய கட்டணமாக ரூ.4,500 வசூலிக்கப்படும் என குறிப்பிடப்பட்டது. 

ரூ.500 மட்டுமின்றி அதிக விலையில் அதிக சேவைகளை வழங்கும் டேட்டா திட்டங்களும் வழங்கப்படும் என இஷா அம்பானி குறிப்பிட்டிருந்தார்.