Aug 10

ஓடும் காரிலிருந்து கீழே விழுந்து உயிர்தப்பிய குழந்தை! திகலூட்டும் -VIDEO

ஓடிக் கொண்டிருந்த காரின் கதவுகள் திறந்துக் கொண்டதால், உள்ளே இருந்த குழந்தை கீழே விழுந்து நூலிழையில் கார் சக்கரத்தில் சிக்குவதிலிருந்து தப்பிய அதிசய சம்பவம் இங்கு நடந்தது.

கடுமையான காயங்கள் எதுவுமின்றி இந்த பெண் குழந்தை உயிர் தப்பியது. பேங்காக் நகரிலுள்ள மின்யூரி மாவட்டத்தில் நடந்த இந்த திகலூட்டும் சம்பவம் ‘டெஸ்கேம்’ எனப்படும் கார் முன்புறக் கேமிராவில் பதிவாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் எண்ணற்றவர்களை  அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

ஒரு வெள்ளை நிற நிசான் அல்மெரா சாலையில் வாகன நெரிசலில் நின்றுக் கொண்டிருந்தது. திடீரென சாலையில் கார்கள் நகரத் தொடக்கிய போது நிசான் காரின் முன் இருக்கைக் கதவு திறந்து கொண்டு, குழந்தை ஒன்று சாலையில் விழுந்தது. 

தொடர்ந்து அந்தக் கார் நகர்ந்துக் கொண்டே இருக்க, அந்தக் குழந்தை பின்புற சக்கரத்தில் சிக்கும் அபாயகரமான நிலையில், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அப்படியே உருண்டு நகர்ந்ததால் அதிஷ்டவசமாக உயிர் தப்பியது. 

 கீழே விழுந்து எழுந்த குழந்தை நகர்ந்து கொண்டிருந்த காரை நோக்கி ஓட்டியது பின்னர் அந்தக் காருக்குள் இருந்த பெண்,  அந்தக் குழந்தையை வாரியெடுத்துக் கொண்ட பின்னர் கார் அங்கிருந்து வேகமாக நகர்ந்து சென்று விட்டது.

பின்புறக் காரிலிருந்து ‘டெஸ்கேம்’ கேமிராவில் இந்தக் காட்சி எடுத்தவர் இதனை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். மேலும், தனது கேமிராவை தாம் சரிவர செயல்பட வைக்காததால் அதிலுள்ள தேதியும் நேரமும் மாறி இருப்பதாகவும் இந்தச் சம்பவம் திங்களன்று இரண்டு நிமிட நேரத்திற்குள் நடந்து முடிந்ததாகவும் கூறியிருக்கிறார்.