Aug 10

Glory of Mathagal நூல் வெளியீடு

“தனித்தனியே ஊரெல்லாம் தம்பதிவை மேற்கொண்டால்

தமிழீழ வரலாற்றின் தடைக்கற்கள் நீங்கிவிடும்”

Glory of Mathagal நூல் வெளியீடு

‘மாதகல் மான்மியம்’ என்ற நூலின் ஆங்கில மொழியாக்கமான Glory of Mathagal   நூலின் வெளியீடு கடந்த 05-08-2017 சனியன்று தமிழ்ப்பூங்காவின் ஆதரவில் கனடாவில் ஸ்காபரோ நகரில் உள்ள 150 “பரோ றைவில்”அமைந்துள்ள நகரமண்டபத்திற் சிறப்பாக நடைபெற்றது.

விழாவின் தலைவராக திரு. அருண் அருள்சுப்பிரமணியம் அவர்களும்அறிவிப்பாளராக செல்வி நிதுஷ பரராசசிங்கம்அவர்களும் கடமையாற்றினர். விழாத் தொடக்கப் பாடல்களையும்மாதகல் எங்களூர் என்ற பாடலையும் “தேர்நகர வேண்டுமெனில்சேர்ந்தொன்றாய் வடம்பிடிப்போம்” என்ற பாடலையும் தமிழ்ப்பூங்கா மாணவர்கள் வழங்கினார்கள்.

நிகழ்ச்சிகள் இளையோர் பயன்பெறும் வகையில் ஆங்கிலத்தில் நடந்தேறின.

பேராசிரியர் யோசெப் சந்திரகாந்தன் அடிகளார் அவர்களும்கவிஞர் கந்தவனம் அவர்களும் ஆசியுரை வழங்கினார்கள்.

வரவேற்புரையை தமிழ்ப்பூங்கா அதிபர் திருமதி யோகா அருள்சுப்பிரமணியம் நிகழ்த்தினார்.

மாநகரசபை உறுப்பினர் திரு. நீதன் சண் அவர்களும் கல்விச் சபை உறுப்பினர் திரு. பார்த்தி கந்தவேள் அவர்களும் கனடா

மாதகல் விளையாட்டுக் கழகத்தின் சார்பில் திரு. சே. சந்திரன் அவர்களும் முன்னாள் பாhராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன்அவர்களும் சிறப்புரை வழங்கினர்.

நூல்பிறந்த கதைபற்றி நூலாசிரியர் சபா. அருள்சுப்பிரமணியம் கூறினார். மொழிபெயர்ப்பாளர் திரு. றேமன்ட்இராஜபாலன் அவர்கள் நூலாசிரியரால் கௌரவிக்கப்பட்டார். பின்பு மொழிபெயர்ப்பாளர்; தனது கருத்துகளை வழங்கினார்.

நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக மாதகலைச் சேர்ந்த இளையோர் நூல்பற்றிய கருத்துகளை வழங்கினார்கள்.

அவ்வாறு கருத்துரைவழங்கியோர்:

1) செல்வி நிதுஷா பரராசசிங்கம் 2) செல்வி. கனிஷாதேவபாலன்

3) செல்வன். நிரூஷ் பாலசுப்பிரமணியம் 4) செல்வி. மனீஷா சுரேஸ்குமார்

5) செல்வி. கீர்த்தனா கடம்பமூர்த்திநூல்பற்றிய அறிமுகவுரை திரு. இராஜ்குமார் குணரட்ணம் அவர்களால் வழங்கப்பட்டது.

நூல்குறித்த ஆய்வுரை அறிஞர் சாமி அப்பாத்துரை அவர்களால் வழங்கப்பட்டது. நூலின் கௌரவப்படியை திருமதி(மாதகல்)கண்ணன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

கனடா மக்கள் விளையாட்டுக் கழகம் முன்மாதிரியாக 500 டொலர்களை வழங்கி 25பிரதிகளைப் பெற்றுக்கொண்டது. நூல்வெளியீட்டிற் கிடைத்த பணம் மாதகல் கல்வி அபிவிருத்திச் சபைத் தலைவருக்கு மாதகல்அபிவிருத்திக்குப் பயன்படுத்த அனுப்பப்பட்டுள்ளது.