Apr 01

இலங்கைக்கு ஜி.எஸ்.பிளஸ்; மே 15இல் வெளிவரும் இறுதித் தீர்மானம்

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு வழங்கப்படுமா, இல்லையா என்பது குறித்த தீர்மானம் எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதியின் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது. 

இந்த விடயம் குறித்து இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் சூன் லெய் மார்க் கூறியுள்ளதாவது,

இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவது தொடர்பில் அடுத்த மே மாதம் 15ஆம் திகதியின் பின்னர் அறிவிக்கப்படும். அதுவரை ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகள் இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை வழங்குவது குறித்து கருத்துக்கூற முடியும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகள் எதிர்க்கும் பட்சத்தில் இலங்கைக்கு குறித்த வரிச்சலுகை கிடைக்காது. எனவே, அரசு மேற்கொண்டுள்ள முன்னேற்றகரமான நடவடிக்கைகளின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கை தொர்பில் தீர்மானிக்கும். 

எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதிவரை எந்தவொரு நாடும் எதிர்ப்புத் தெரிவிக்காவிடின் இலங்கைக்கு பூரணமாக ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைக்கும் என்றார்