Apr 01

கனடாவில் கலாநிதி விஜயகுமார் மறைவு

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவரும் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் பொறியியல்துறைப் பேராசிரியரும் கனடாவில் முன்னனணி ஆராய்சி நிறுவனமான ROC-SCIENCE நிறுவனத்தின் கணிதத்துறை வல்லுனராகவும் விளங்கிய கலாநிதி சின்னத்துறை விஜயகுமார் மார்ச் 31 2017 வெள்ளிக்கிழமை காலமானார்.


1987களில் கணனிகளில் தமிழ் எழுத்துக்களை உருவாக்கி எந்தவித பிரதிபலனும் கருதாமல் பாவனைக்கு விட்டதோடு மட்டுமல்ல 1988ம் ஆண்டு கனடாவின் மூத்த தமிழ் ஊடகமாக விளங்கும் உலகத்தமிழர் பத்திரிகை, ஈழமுரசு பத்திரிகை முற்றுமுழுதாக கணணி மயப்படுத்தபட்ட போது அதற்கான முழுத் தமிழ் எழுத்துக்களை புதிதாக உருவாக்கி கணணியில் பத்திரிகை வடிவமைப்பு, பத்திரிகைத் தயாரிப்பு என்பவற்றை தொண்டர்களுக்குப் பயிற்றுவித்து
வெற்றிகரமாக வெளிவர இரவு பகலாக முன்னின்று உழைத்த பெருமைக்குரியவர். கனடாவில் வெளிவரும் பல பத்திரிகைகள் கணணிமயமாக்கலுக்கு இவரின் வழிகாட்டலே பெரும் உதவி புரிந்தது என்பது இங்கு குறிப்பிடத்தங்கது. தமிழ் இனத்திற்கு அவர் ஆற்றிய சேவை  பெருமைக்குரியது. இறுதி வரை பிரதிபலன் எதிர் பாராது இளைய தலைமுறையினருக்கு தனது கல்விச் செல்வத்தை பகிர்ந்து தமிழ் இன தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்று அயராது உழைத்தவரின் இழப்பு தமிழ் இனத்திற்கு பெருமிழப்பாகும்.


ரொரன்ரோ பல்கலைக்கழக பொறியியல்துறை பேராசிரியரும், 
ஹாட்லிக் கல்லூரி பழைய மாணவருமான 
கலாநிதி விஜயகுமார் சின்னத்துரை 
அவர்கள் வெள்ளிக்கிழமை மார்ச் மாதம் 31ந் திகதி காலமானார்.

அன்னார் யாழ்ப்பாணம் உடுப்பிட்டியை சேர்ந்த காலஞ்சென்ற ஆசிரியர் 
ஆறுமுகம் சின்னத்துரை, துன்னாலையை சேர்ந்த காலஞ்சென்ற ஆசிரியை 
திருமதி நாகரட்னம் சின்னத்துரை ஆகியோரின் அன்பு மகனும், 
வத்சலாவின் அன்புக்கணவரும், சனகனின் அன்புத்தந்தையும், 
அனுஷா (கொழும்பு), தயாவதி (அவுஸ்திரேலியா), ரவிகுமார் (கொழும்பு), 
அனுராதா (அவுஸ்திரேலியா) வைத்தியகலாநிதி மித்திரகுமார் (கொழும்பு) 
ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற கலாதேவன், மற்றும் விஜயகுலேந்திரன், சுவர்ணா, சிறிகுமார், மீனகுமாரி, மற்றும் ஐங்கரன், சுரவரன், மதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.