Aug 09

30 ஆக இருந்த அகதிகள் வரவு 300 ஆக அதிகரிப்பு

அமெரிக்க எல்லைகள் ஊடாக கனடாவுக்குள் சட்டவிரோதமாக நுளையும் அகதி தஞ்சக் கோரிக்கையாளர்களைத் தங்க வைப்பதற்காக மேலும் ஒரு தங்குமிடம் மொன்றியலில் திறக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா ஊடாக இவ்வாறு கனடாவுக்குள் நுளையும் அதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த புதிய நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை குறித்த இந்த தற்காலிக தங்குமிடம் திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இதில் சுமார் 300 பேர் வரையில் தங்க முடியும் என்று மொன்றியல் நகரபிதா தெரிவித்துள்ளார்.

யூலை மாதத்தின் ஆரம்பத்தில் நாளாந்தம் 30 பேர் என்ற கணக்கில் இருந்த அகதிகளின் வரவு எண்ணிக்கை, தற்போது நாளுக்கு 250, 300 என்று அதிகரித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெரும்பாலும் ஹெய்ட்டி நாட்டைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அண்மைக் காலங்களில் அதிகமான கனடாவுக்குள் வந்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வந்து சேர்ந்த அகதிகளை தங்க வைப்பபதற்கு மொன்றியலில் உள்ள ஒலிம்பிக் அரங்கம் ஏற்கனவே திறந்து விடப்பட்டுள்ள நிலையில், மொன்றில் நகரம் அதற்கு மேலும் பங்களிக்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்கவே இன்று இந்த புதிய தங்குமிடம் திறக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.