Aug 08

கல் உடைத்து தனது தங்கையை காப்பாற்றும் 11 வயது சிறுவன்… உண்மையான தியாகி !!

கல் உடைத்து தனது தங்கையை காப்பாற்றும் 11 வயது சிறுவன்… உண்மையான தியாகி 11 Year Old Breaks Bricks For His Sister Feature

அண்ணன் தங்கை உறவை போன்ற மதிப்பு மிக்க உறவு வேறு எதுவும் இல்லை என்று சொன்னாலும் அது மிகையாகாது.

இந்த உறவின் புனிதத்தை எவ்வளவு பேர் கொண்டாகிறார்கள் என்பது நமக்குத் தெரியாது, ஆனால் பங்களாதேஷை சேர்ந்த 11வயது சிறுவன் தனது வாழ்க்கையையே தனது தங்கைக்காக அர்பணித்துள்ளான்.

பங்களாதேஷில் மிகவும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த ராஹத் என்னும் 11வயது சிறுவன் தனது தாயின் உடல்நலக்குறைவால், தனது தங்கைக்கு அவரே தாயாகவும், தந்தையாகவும் இருந்து வருகிறார்.செங்கல் உடைக்கும் வேலை செய்து வரும் இவருக்கு 100 செங்கல் உடைத்தால் 40 ரூபாய் கிடைக்குமாம்.

இதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து தனது தங்கைக்கு தேவையான பால் உணவு என அனைத்தையும் வாங்கி தரும் இந்த சிறுவன், பல நேரங்களில் வெறும் பால், டீ மற்றும் பன் மட்டுமே சாப்பிடுகிறாராம்.

இவ்வளவு சிரமத்திற்கு மத்தியிலும் தனது தங்கைக்கு நல்ல கல்வி வழங்க வேண்டும் என்பதே தனது வாழ்வின் இலட்சியம்  என்றும் தான் பள்ளிக்கு செல்லாத  சிறுவன் தெரிவித்துள்ளார்.