Apr 01

மாவை எம்.பி.யை கண்டவுடன் கதறியழுதஉறவுகள்


காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவினர்கள் ஒன்றிணைந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு  போராட்டம் தீர்வின்றி தொடர்கின்றது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கடந்த 8ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த போரட்டம்   எந்தவித சாதகமான பதில்களும் அற்றநிலையில் தொடர்ந்து செல்கின்றது.

இந்த நிலையில் தொடர்ந்து போராடிவரும் காணாமல் ஆக்கப்படடோரின் உறவினர்களை முல்லைத்தீவுக்கு  விஜயம் செய்த யாழ் மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா நேரில்  பார்வையிட்டதுடன் காணாமல் ஆக்கப்படடோரின் உறவுகளின் கருத்துக்களையும் கேடடறிந்து கொண்டார்.

பாராளுமனர் உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம்  தமது பிள்ளைகளை பற்றிய நல்ல முடிவை பெற்றுத்தாருங்கள் என கதறிய உறவுகள் உங்களிடம்தான் நாம் உரிமையுடன் இதனை கேட்கலாம் எனவும்  தெரிவித்தனர்.