Aug 08

காட்டுத்தீ: எச்சரிக்கையை மீறி வசித்துவரும் மக்கள்

பிரிட்டிஷ் கொலம்பியாவின் வில்லியம்ஸ் லேக் பகுதியை அண்மித்த கெரிபூ பகுதியில், சுமார் 600இற்கும் மேற்பட்டோர் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதிகளில் காட்டுத்தீ மோசமாகி வருவதால் அப்பகுதியிலுள்ள மக்களை வெளியேறுமாறு மக்கள் தொடர்ந்தும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதேவேளை, வடக்கு பகுதியிலுள்ள மக்களை வெளியேறுமாறு நேற்று புதிதாக எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் மாகாண அரசினால் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டு ஒரு மாதமாகியும் தொடர்ந்தும் காட்டுத்தீ தீவிரமடைந்து வருகிறது.

காட்டுத்தீயில் ஆயிரத்து 100 சதுரகிலோமீற்றர் பரப்பிலான யானை காடொன்றும் தீக்கிரையாகியுள்ளது. இத்தீ பரவல் குறித்த பகுதி மக்களின் செயற்பாட்டால் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.