Mar 31

அபிவிருத்தி விடயத்தில் இலங்கைக்கு ஐ.நா. பிரதிநிதி அறிவுறுத்தல்

பாதிக்கப்பட்ட மக்களை புறக்கணித்து அபவிருத்தியை மேற்கொள்ள வேண்டாம் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதியும், ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான உனா மெக்கோலி அறிவுறுத்தியுள்ளார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை  பேண்தகு இலங்கை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்திற்கான கண்காட்சியை  ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறான அறிவுறுத்தலைல் செய்தார்.

இலங்கையின் நிலையான அபிவிருத்தி இலக்குகளைப்பற்றி கதைப்பதற்கான இவ் ஐந்து நாட்களும் மிக முக்கியமானதாக காணப்படுகின்றது. நாம் புதிய அபிவிருத்தி பாதைக்குள் நிச்சயம் கால்பதிக்க வேண்டும்.  

அனைத்து மக்களும் அனைத்து இன மதம் சாராத மக்களும் அபிவிருத்தியில் ஒன்ற்pணைணய வேண்டும். அபிவிருத்தி இலக்கு என்பது மிகவும் கடினமானது என்பதை நாம் அனைவருமே உணர்ந்துள்ளோம். 

ஆனால் அந்த இலக்கை அடைய தேவையான அனைத்து சாத்தியக்கூறுகளும் இலங்கையிடம் உள்ளது.  தெற்காசியாவிலேயே இலங்கையின் அபிவிருத்தி மார்க்கங்கள் வித்தியாசமானது. அது மிகவும் வரவேற்கத்தக்கது 

அந்த பயணத்தை அடைய கூட்டு ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகின்றது. வரலாற்றில் இது தீர்க்கமான காலமாக உள்ளது. ஜனாதிபதியின் உரையில் காலநிலை மாற்றம் தொடர்பில் அதிகமாக கதைத்திருந்தார்.

உண்மைதான் காலநிலை மாற்றமே நமக்குள்ள பெரிய சவாலாக உள்ளது. அந்த சவாலை அடைய நாம் ஒன்றிணைவோம் என்றார்.