Aug 08

ரொரன்ரோவில் இரண்டு விமானங்கள் மோதல்: விசாரணை தீவிரம்

ரொர்னரொ பியர்சன் அனைத்துலக விமான நிலையத்தில், இரண்டு பயணிகள் விமானத்தின் இறக்கைகள் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்ட சம்பவம் தொடர்பில், கனேடிய போக்குவரத்து பாதுகாப்பு சபை அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுதது வருகி்னறனர்.

சனிக்கிழமை இரவு 10.20 அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லத் தயாரான பொலிஷ் எயர்லைன்ஸ் விமானத்தினதும், தரையிறங்கிய வந்து கொண்டிருந்த எயர் கனடா விமானத்தினதும் இறக்கைகள், ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தினை அடுத்து இரண்டு விமானங்களில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டதுடன், அந்த விமானப் பயணங்கள் நிறுத்தப்பட்டு, அவர்கள் பிறிதொரு விமானம் மூலம் பயணத்தை தொடர நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

எனினும் இந்த சம்பவத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவிலலை என்று கூறப்படுகிறது.இதேவேளை ரொரன்ரோ விமான நிலையத்தில் பணியாற்றும் ஒரு தொகுதி ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு்ளள நிலையில், அவர்களுக்கு பதிலான தற்காலிகமான பணிக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்களாலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு்ளளன.

தற்காலிகமாக புதிய பணியார்களை வேலைக்கு அமர்த்தியுள்ள பணியாளர் ஒப்பந்த நிறுவனம், அவர்களுக்கு இரண்டுமணிநேர பயிற்சியை மட்டுமே வழங்கிவிட்டு, இயங்கும் விமானங்களுக்கான பணிகளில் ஈடுபடுத்தியுள்ளதாகவும், வேலை நிறுத்த போராட்டத்தில ஈடுபட்டுள்ள பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இவ்வாறான குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்துள்ள குறித்த அந்த வேலை வழங்குனர் நிறுவனம், சரியான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தின் மீது, புதிதாக வந்த எயர் கனடா விமானம் மோதியதாக தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலையிலேயே குறித்த இந்த சம்பவம் தொடர்பிலான துல்லியமான விசாரணை நடவடிக்கைகளில் கனேடிய போக்குவரத்து பாதுகாப்பு சபை அதிகாரிகள் தீவிரமான ஈடுபட்டு வருகின்றனர்.

விசாரணைகள் இன்னமும் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதாகவும், ரொரன்ரோ விமான நிலையங்கள் அதிகார சபை, எயர் கனடா, பணியாளர்கள் நிறுவனம் போன்றவற்றில் இருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், இது குறித்த அடுத்த கட்ட நகர்வுக்கு சில நாட்கள் ஆகலாம் எனவும் போக்குவரத்து பாதுகாப்பு சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.