Mar 31

தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலில்லாத காணிகளை வழங்கலாம்; தினேஷ்க

வடக்கு, கிழக்கு மாகாணங்களில்  தேசிய பாதுகாப்புக்கு  அச்சுறுத்தல் ஏற்படாதவகையில்   பொதுமக்களின்  காணிகளை    மீள்வழங்கலாம். 

மாறாக  காணிகளை   வழங்க முடியாத நிலைமை காணப்படுமாயின் மக்களுக்கு   நட்டஈடு வழங்கவேண்டியது அவசியமாகும்  என்று  கூட்டு எதிரணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ்குணவர்த்தன தெரிவித்தார். 

வடக்கு, கிழக்கு மாகாணங்களில்  பொதுமக்களின் காணிகள் பாதுகாப்புத் தரப்பினரால் பெற்றுக்கொள்ளப்பட்டமை தொடர்பில் கூட்டு எதிரணி   மதிப்பீடு ஒன்றை செய்து வருகிறது. அந்த மதிப்பீடு முடிவடைந்ததும் அந்த நிலைப்பாட்டை நாம்  அறிவிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.