Mar 31

டுபாய் விமானத்தின் கழிவறையில் 14 மில். ரூபா பெறுமதியான ஹெரோயின்

14 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொன்ட 1.4  கிலோகிராம் எடையுள்ள ஹெரோயின் போதைப் பொருள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கை சுங்கப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.

 பிளை டுபாய் விமானத்தின் கழிவறையில் இருந்தே மிகப் பாதுகபபாக பொதி செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த  போதைப் பொருள் மீட்கப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் பராகிரம பஸ்நாயக்க தெரிவித்தார்.

 எவ்வாறாயினும் இந்த போதைப் பொருள் தொடர்பில் இரு அந்த விமானத்தில் பயணம்ச் எய்துள்ள இரு பாகிஸ்தானியர் மீது சந்தேகம் நிலவுவதாகவும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை போதைப் பொருளுடன் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவிடம் கையளித்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தர்மசேன கஹந்தவ தெரிவித்தார்.

 மாலைதீவில் இருந்து இலங்கை நோக்கி வந்த பிளை டுபாய் எப்.இஸட். 555 எனும் விமானத்தில் மர்ம பொதிகள் இருப்பதாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவ்விமானம் தறையிறக்கப்ப்ட்ட போது அதனை சுத்தம் செய்யும் ஊழியர் ஒருவர் சுங்கப் பிரிவுக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து விமானத்தை தமது பொறுப்பில் வைத்து சுங்கப் பிரிவினர் சோதனைச் செய்தனர். இதன் போதே அதன் கழிவறையில் இருந்து  குறித்த 1.4 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக சுங்கத்தின் பிரதி பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்தார்

இதன் பெறுமதி 14 மில்லியனுக்கும் அதிகமாகும். நான்கு பொதிகளில் காணப்பட்ட இந்த போதைப் பொருள் பிரவுன் சுகர் ரக சுத்தமான ஹெரோயின் என தெரியவந்துள்ளது.