Mar 31

வட கொரிய தலைவரது சகோதரரின் பூதவுடல்தாய்நாட்டை வந்தடைந்தது

வட கொரிய தலைவர் கிம் யொங் உன்னின்   படுகொலை செய்யப்பட்ட சகோதரரான கிம் யொங் நாமின் பூதவுடல்  மலேசியாவிலிருந்து அவரது தாய்நாட்டை வந்தடைந்துள்ளதாக  சீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 வட கொரியாவானது  குறிப்பிட்ட பூதவுடலை அதன்  ஆளடையாளம் உறுதிப்படுத்தப்படாத நிலையில்  தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரியிருந்தது.

 வட கொரியாவிலிருந்து வெளியேறுவதிலிருந்து   தடுக்கப்பட்டிருந்த  9  மலேசிய பிரஜைகளை திருப்பி அனுப்பப்பட்டதற்கு  பதிலீடாக மலேசியா கிம் யொங் நாமின் பூதவுடலை   ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகக்  கூறப்படுகிறது.

கிம் யொங் நாம்  மலேசிய கோலாலம்பூர் விமான நிலையத்தில்  வைத்து  படுகொலை செய்யப்பட்டதையடுத்து அந்த இரு நாடுகளுக்குமிடையிலான  இராஜதந்திர உறவுகள் முறுகல் நிலையை அடைந்திருந்தன.