Aug 07

அல்பேர்ட்டாவின் நடப்பு ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வீதம் அதிகரிப்பு

அல்பேர்ட்டாவின் நடப்பு ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2.9 சதவீதமாக பதிவாகியுள்ளது.

எதிர்வரும் 2018ஆம் ஆண்டில் அல்பேர்ட்டாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.4 சதவீதத்தினால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கனடாவின் 10 மாநிலங்களிலும் அதுவே முதல் நிலையில் இருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

பெற்றோலியத்தின் விலை பீப்பாய்க்கு 50 டொலர்களுக்கும் குறைவாக வீழ்ச்சி கண்டதனை அடுத்து, அல்பேர்ட்டா மட்டுமன்றி கனடாவின் பொருளாதரமும் வீழ்ச்சியை எதிர்நோக்கிய நிலையில், தற்போதைய இந்த பொருளாதார மீள் எழுச்சியானது சாதகமான ஒரு நிலைப்பாடாகவே அனைத்து தரப்பினராலும் நோக்கப்படுகிறது.