Mar 31

வெற்றிகரமாக ஏவப்பட்ட மீளப் பயன்படுத்தப்படக் கூடிய ஏவுகணைப் பாகம்

அமெரிக்க கலிபோர்னியா மாநிலத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் ஸ்பேஸ்எக்ஸ் கம்பனியானது  தனது பல்கொன் 9  ஏவுகணைகள் ஒன்றின் பாகத்தை மீள  வெற்றிகரமாக  ஏவியுள்ளது.

இந்த ஏவுகணைப் பாகமானது இதற்கு முன்னர்  11  தாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஏவுகணை ஏவும் நடவடிக்கையின் போது  பயன்படுத்தப்பட்டது.

 இந்நிலையில்  தற்போது  அந்த ஏவுகணைப் பாகத்தைப் பயன்படுத்தி  புளோரிடா மாநிலத்திலுள்ள கென்துக்கி விண்வெளி நிலையத்திலிருந்து  ஏவப்பட்ட மேற்படி ஏவுகணை மூலம்  தொலைத் தொடர்பாடல் செய்மதியொன்று   பூமியின் சுற்றுவட்டப் பாதைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மேற்படி ஏவுகணை ஏவும் முயற்சியானது  ஏவுகணைத் தொழில்நுட்பம் தொடர்பான  புதிய மைல் கல்லாக கருதப்படுகிறது.

ஏற்கனவே  பயன்படுத்தப்பட்ட ஏவுகணைப் பாகமொன்று இரண்டாவது தடவையாக ஏவப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

வழமையாக ஏவுகணைகள் ஏவப்படும் போது அதன்  பாகங்கள் அழிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.