Aug 06

4 கால்கள் 3 கைகளுடன் பிறந்த அதிசயக் குழந்தை! பிழைக்க வைத்த இந்திய மருத்துவர்!

ஜெய்ப்பூர் அருகே உள்ள சிரோஷி மாவட்டத்தில் வசித்துவருபவர் ஃபுலி பாய். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு நான்கு கால்கள், மூன்று கைகளுடன் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.

அதிர்ச்சியடைந்த ஃபுலி பாய் மற்றும் மருத்துவர்கள் அந்தக் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து காப்பாற்ற வேண்டுமென முடிவு செய்தனர். டாக்டர் அசோக் குப்தா தலைமையிலான மருத்துவர் குழு இந்த வித்தியாசமான குழந்தைக்கு கடந்த வியாழக்கிழமை அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

வெற்றிகரமாக நடந்த அறுவை சிகிச்சையில் குழந்தையின் வழக்கத்திற்கு மாறாக ஒட்டியிருந்த கைகள் அகற்றப்பட்டன. இப்போது குழந்தை நல்ல நிலையில் இருப்பதாகவும், இன்னும் ஒருவாரம் கண்காணித்த பிறகு டிஸ்ச்சார்ஜ் செய்வோம் என்றும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.