Mar 31

செல்வா காட்டிய பாதையில் அபிலாசைகளை வெண்றெடுப்போம்; வவு. இளைஞர் அணி தலைவர் செந்தூரன்



தந்தை செல்வாவின்119வது பிறந்ததினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட தமிழரசுக்கட்சி இளைஞர் அணி தலைவர் செந்தூரன் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தமிழ் மக்கள் அனைவராலும் தந்தை செல்வா எனப்போற்ரப்படும் s.j.v செல்வநாயகம் அரசியல் வாதி மத்திரமல்ல அவர் ஈழத்தின் மிகவும் பிரசித்தமான ஒரு வழக்கறிஞரும் ஆவார் யாழ்ப்பாணம் தொல்புரத்தைச் சேர்ந்த சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளைக்கும் அன்னம்மா கணபதிப்பிள்ளைக்கும் மகனாக மலேசியாவின் தூய்மையான நகரமான இல்போ நகரத்தில் 1898ஆம் ஆண்டு பங்குனி மாதம் முப்பத்து ஓராம் திகதி(31/03/1898) பிறந்தார்.

இலங்கை அரசியல் வரலாறில் தலைசிறந்த நேர்மையான அரசியல் தலைவராக மதிக்கப்பட்ட தந்தை செல்வா தமிழ்த்தேசியத்திற்கு 1949 இல் அடித்தளமிட்ட பெருந்தலைவர் ஆவார் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒற்ரை ஆட்சி ஒருபோதும் தீர்வாக அமையாது என்றும் சமஸ்ட்டி முறையிலான அரசியல் தீர்வே தமிழ்மக்களின் விடிவிற்கான பாதையாக அமயும் என்று குறிப்பிட்ட தந்தை செல்வா தான் மரனிக்கும் வரை தமிழ்த்தேசியத்தின் விடுதலைக்காக அகிம்சை வளியிலேபோராடிய பெருந்தகை அவரின் உள்ளத்தில் உதித்த சிந்தனையின் செயல் வடிவமே எங்கள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி என்பதை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

அந்த வகையிலே தந்தை செல்வாவின் 119வது பிறந்தநாள் இன்றாகும் இந்த புனிதமான நாளிலே தந்தை செல்வாவின் பாதம் பணிந்து அவர் காட்டிய பாதையில் அகிம்சை வளியிலே எம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வினை அடைவதற்கு நாம் அனைவரும் கட்சி மத வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஓர் அணியிலே செயற்பட வேண்டியது இன்றையகாலத்தின் தேவை என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!