Aug 05

யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் நீதிமன்றங்களில் சுயாதீனத்தில் தலையீடு

யாழ்ப்பாணத்தில் நீதித்துறைச் செயற்பாடுகள் பற்றி இன்றுஇலங்கையில் மட்டுமன்றி உலகம் புராகவும் பேசப்படுகிறது.யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நீதிபதியானமா.இளங்செழியனின் மெய்பாதுகாவளர் நல்லுர் வீதியில் சுட்டுக்கொள்ளப்பட்டது நீதித்துறையே பரப்பரப்புக்கு உள்ளாகி உள்ளது.அங்கு இலக்கு வைக்கப்பட்டவர் நீதிபதியா? இல்லை அது தற்செயலானசம்பவமா? என்பது வாதப்பிரதிவாதமாக அமைகிறது.

என்றோ ஒருநாள்உண்மை வெளிவரும். இந்த பாரதுரமான நிகழ்வு இடம்பெறுவதற்குஒருவாரத்த்pற்கு முன் கடந்த 15.07.2017 சனிக்கிழமை அன்றுயாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் வடமாகாணத்தில்;கடமையில் உள்ள நீதிபதிகள் அனைவரையும் அழைத்து தனியார்விடுதியொன்றில் இரவு களியாட்ட நிகழ்வும் இராப்போசனமும்இடம்பெற்று உள்ளது.

இதில் மதுபான விருந்து உபசாரமும் இடம்பெற்றுஉள்ளது. யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கமே இந்நிகழ்விற்குபொறுப்பு. இதில் கடமையிலுள்ள நீதிபதிகளையும் நீதவான்களையும்விருந்து உபசாரத்திற்கு அழைத்தமை நீதித்துறையின் சுயாதீனத்தில்சட்டத்தரணிகள் சங்கம் தலையீடுவதாக அமைகிறது.

உலகில் இன்று வரை வளர்முகநாடுகளான அமெரிக்காபிரித்ததானியா போன்றவற்றில் கூடநீதிமன்ற செயற்பாடுகளில் பழமை பேணுவதோடு சில மரபு வழிவந்தஒழுக்கங்களை பேணி வருகின்றனர். இலங்கையிலும் ஏனையபிரதேசங்களிலும் சட்டத்தரணிகள் சங்கங்களில் ஒன்று கூடல்கள்ரூபவ்விருந்து உபசாரங்களுக்கு கௌரவ நீதிபதிகள் அழைக்கப்படுவதும் இல்லை.

நீதிபதிகள் அவ்வாறான பொது களியாட்டங்களில் கலந்துகொள்வதும்இல்லை. அதற்காக நீதிபதிகளுக்கு விசேட சலுகைகள் வழங்கப் படுகின்றன.இதற்கு நல்லதோர் உதாரணமாக அண்மையில் ஓய்வு பெற்றஇலங்கையின் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் யாழ்ப்பாண இந்துகல்லுரியின் பழைய மாணவர்.

அக்கல்லுரியின் 125 ஆவது ஆண்டுவிழாவிற்கு கௌரவ விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தும் தனதுதொழில் கௌரவம் கருதியும் இலங்கையின் நீதி துறையின் சுயாதீனத்தைபாதுக்காப்பதற்காகவும் அவர் அந் நிகழ்வில் கலந்து கொள்ளாது தனதுநிலைப்பாட்டை தெரிவித்து இருந்தார். அவ்வாறான உயர்வான தொழில்தர்மம்பேணுபவர்களும்; யாழ்ப்பாணத்து தமிழரே ஆனால் இனறுயாழ்ப்பாணத்தில் சட்டத்தரணிகள் சங்கம் நீதிதுறையை பிழையாகவழிநடத்துவது கண்டனத்திற்குறிய விடயமாகும்.

இன்று முழு இலங்கையையும்அதிர வைத்துள்ள வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபரை தப்பிக்கவைப்பதில் சட்டத்தரணியும் சட்டவிரிவுரையாளருமான வி.ரி.தமிழ்மாறனின் சம்பந்தப்பட்டாரா என்பது தொடர்பாக விசாரனைகள்இடம்பெறுகிறது. இவரிடம் சட்டத்தை தமிழில் கற்றவர்கள் தான் இன்றுநீதிமன்றங்களில் சட்டத்தரணிகளாகவும்நீதிபதிகளாகவும் கடமை புரிகிறார்கள்.

15.07.2017 இடம்பெற்றகளியாட்ட நிகழ்விற்கு யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவிஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம்தான் பொறுப்பு கூறவேண்டும். 30 ஆண்டுகளுக்கு மேல் இவர் இச் சங்கத்தில் தலைவராகஇருகிறார். இது என்ன வாழ்நாள் பதவியா கின்னஸ் புத்தகத்தில்பதியப்படுமா? சட்டத்துறையில் நிபுணத்துவம் கருதியே ஜனாதிபதிசட்டதரணி பதவி வழங்கப்படுகிறது. இது சட்ட வாதாடிகளுக்கே வழங்கப்படுவதுவழக்கம்.

ஆனால் உயர் நீதிமன்றத்திலோ மேல் முறையீட்டுநீதிமன்றத்திலோ எந்த வழக்கும் பேசாது முதல் தடவையாக மஹிந்த அரசுஜனாதிபதி சட்டத்தரணி பதவி வழங்கியதுசாந்தாஅபிமான்னசிங்கத்திற்கே. இவர் தனது ஆளுகையின் கீழ் உள்ளசட்டத்தரணிகள் சங்கத்தை பிழையாக வழிநடத்த கூடாது. சட்டத்தரணிகள் சங்கத்தில்கீழ் உள்ள இரண்டு சட்டத்தரணிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளர்.

யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத்தின் கீழ் உள்ள ஓர் பெண்சட்டத்தரணிக்கு எதிராக நீதி மன்ற அவமதிப்பு வழக்கு இருநீதிமன்றங்களில் காணப்படுகிறது. இவற்றை விசாரிப்பதந்குசட்டத்தரணிகள் சங்கம் தடையாக இருக்கக்கூடாது. சட்டத்தின் முன் அனைவரும்;சமன.; யுத்ததினால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தை யாழ்ப்பாணசட்டத்தரணிகளின் செயற்பாடுகளால் மேலும் மேலும் துன்பத்திற்குஉள்ளாகிறார்கள். சட்டதரணிகள் சங்கம் நீதிபதிகளின் நியமனம்இடம்மாற்றங்களில் தலையிடக்கூடாது.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில்சிவில் மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக இருக்கும்இராமநாதன் கண்ணனின் நியமனத்தில் சட்டதரணிகள் சங்கம் தலையிட்டமைதொடர்பில் பெரும் அரசியல் சர்ச்சை நிலவியது. இதன்பிரதிபலிப்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கமே சிங்கள மயமாகியுள்ளது.

இதேபோல் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றிய மாவட்ட நீதிபதிகளானஎம்.கணேசராஜா கஜநிதிபாலன் போன்றோர் சட்டதரணிகள் சங்கத்தின்தலையீட்டினால் திடீரென இடம்மாற்றம் செய்யப்பட்டதும்குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தமது வருமானங்களை உயர்த்துவதற்காகவும்சட்டத்தரணிகள் நீதிமன்றங்களில் தமது சுய ஆதிக்கத்தை நிலைநாட்டுவாதற்காகவும். சுயாதீமான நீதிபதிகளையும் இணைத்து களியாட்டநிகழ்வுகளை ஒழுங்குப்படுத்துவது நீதிக்கு முரண். நீதி துறையைகேவலப்படுத்தும் செயற்பாடாகும்.

ஆலயங்களாக போற்றப்படும்நீதிமன்றங்களுக்கு கல் எறிந்து தாக்கியவர்களும் யாழ்ப்பாண மக்களேஎன்பதை உணர்ந்து செயற்பட வேண்டும். இது ஊடகவியளாளர்களின் உச்சஅதிகாரமே தவிர தனிப்பட்டவர்கனையே தனிப்பட்ட வழக்குகளையேவிமச்சிப்பதாக கருத வேண்டாம்.

கௌதமன்