Aug 04

இன்ரெலின்(INTEL) வரலாற்று சாதனையை முறியடித்தது சம்சுங்

மைக்ரோ சிப்களை தரமாக தயாரிப்பதில் இன்ரெல்(intel) நிறுவனமே முதலிடம் வகித்திருந்தது. இதை முறியடித்துள்ளது சம்சுங் நிறுவனம்.கணணி, கமரா, உட்பட அனைத்து வகையான தொலைபேசி சாதனங்களுக்கும் மைக்ரோசிப்கள் அவசியம். அதை தரமாக தயாரிக்கும் நிறுவனமாக இத்தனை வருடங்களும் இன்ரெல்(intel) முதலிடம் வகித்தது.

அந்த வகையில் இந்த வருடனம் இடம்பெற்ற ஜ.சி.சி சம்பியன் கிண்ணத் தொடரில் துடுப்பாட்ட மட்டைக்கும் மைக்ரோ சிப் பூட்டியது இன்ரெல்(intel)நிறுவனம்.இவ்வாறு மைக்ரோ சிப்பினை விதம் விதமாகவும் தனித்துவமாகவும் தரமானதாகவும் வடிவமைத்து இரண்டரை தசாப்தமாக அமைத்த முண்ணிலை வகித்தது இன்ரெல். ஆனால் இந்த வருடத்தின் இதுவரையிலான காலாண்டில் இன்ரெல் நிறுவனம் குறைகடத்திகள் மூலம் 14.8பில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளது. ஆனால் இதே குறைகடத்திகள் மூலம் சம்சுங் 15பில்லியன் வருமானத்தை ஈட்டி இன்ரெலை பின்தள்ளியுள்ளது.

இத்தனை வருடமாக முண்ணனியில் இருந்த இன்ரேலின் வரலாற்று சாதனையை குறித்த வருவாயின் முலம் சம்சுங் முறியடித்து வெற்றிக்களிப்பில் உள்ளது. குறித்த வரலாற்று வீழ்ச்சியில் இருந்து இந்த ஆண்டே இன்ரேல் நிமிருமா என்பது கேள்வி?