Aug 04

அரியவகை திமிங்கலங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை

அரியவகை திமிங்கலங்களை பாதுகாப்பதற்கு ஒட்டாவா அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என மத்திய மீனவளத்துறை அமைச்சர் டொமினிக் லேப்லோன் தெரிவித்துள்ளார்.

புனித லோரன்ஸ் வளைகுடாவில், கடந்த ஜூன் மாத ஆரம்பம் முதல் 10 அரிய திமிங்கலங்கள் உயிரிழந்ததை தொடர்ந்தே மத்திய அமைச்சரின் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் தெரிவித்த அவர், ”திமிங்கலங்களின் உயிரிழப்பு தொடர்பில் விஞ்ஞானிகள் சாத்தியமான ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, குறித்த திமிங்கல இனத்தை பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து பணிகளையும் கனேடிய அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

இதேவேளை, திமிங்கலங்களின் உயிரிழப்பை தடுப்பதற்கான சாத்தியமான நடவடிக்கைகளை மீன்பிடித் திணைக்களம் ஏற்கனவே முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.