Mar 01

விக்கியின் இனவாத கோரிக்கைகளை ஏற்க போவதில்லை

புதிய அரசியலமைப்பு வந்தால் வடக்கு மாகாண சபைக்கு நினைத்த மாதிரி தீர்மானங்கள் நிறைவேற்ற முடியாது என  ஐக்கிய தேசியக் கட்சியின் கொலன்னாவை தொகுதி அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியவர் புதிய அரசியலமைப்பு வர போகின்றது. புதிய அரசியலமைப்பில் நாடு பிளவுப்படாது. வடக்கு தமிழ் தலைவர் தற்போது தனிநாடு கோரவில்லை. தமிழ் தலைவர்கள் விட்டுக்கொடுப்புடன் முன்வந்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் நாடு பிளவுப்படுவதற்கு வாய்ப்பில்லை. விக்கினேஸ்வரனின் இனவாத கோரிக்கைகளை ஏற்க போவதில்லை.

தமிழ் தலைவர்கள் விட்டுக்கொடுப்புடன் முன்வரும் போது சிங்கள இனவாதிகள் அதற்கு முட்டுகட்டையாக உள்ளனர்.

எனவே இனவாதிகளுக்கு இடமில்லை. புதிய அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு இனவாத தீர்மானம் எடுக்க முடியாது.


இதன்படி வடக்கு மாகாண சபைக்கு புதிய அரசியலமைப்பின் பிரகாரம் இனவாத தீர்மானத்தை எடுக்க முடியாது என்றார்