Mar 31

வில்பத்து வர்த்தமானி அறிவித்தல்; இறுதித் தீர்மானம் நாளை

வில்பத்துவுடன் சம்பந்தப்பட்ட “மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனம்” எனப் பெயரிட்டு வெளியிடப்பட்டுள்ள வர்த்மானி அறிவித்தல் தொடர்பில் நாளை தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

எனவே அவ்விவகாரம் தொடர்பில் முஸ்லிம்கள் மேற்கொண்டுள்ள கவனயீர்ப்பு போராட்டங்களை கைவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் வேண்டிக்கொண்டதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்தார்.

முஸ்லிம் சிவில் அமைப்புகள் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று மாலை கொழும்பிலுள்ள ரமடா ஹோட்டலில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.