Mar 31

டெஸ்ட் அணிகளின் புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் அணிகளின் புதிய தரவரிசை பட்டியல் வெளியிட்டப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் ஒரு புள்ளியை கூடுதலாக பெற்ற இந்தியா 122 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் தோல்வியில் இருந்து தென்ஆப்பிரிக்க அணி தப்பியதால் ஒரு இடம் முன்னேறி 2வது இடத்தை பிடித்தது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை பறிகொடுத்ததால் ஒரு புள்ளியை இழந்த ஆஸ்திரேலியா 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

அணிகளின் தரவரிசை வருமாறு,

1. இந்தியா (122 புள்ளி), 2. தென்ஆப்பிரிக்கா (109), 3. அவுஸ்திரேலியா (108), 4.இங்கிலாந்து (101), 5.பாகிஸ்தான் (97), 6.நியூசிலாந்து (96), 7.இலங்கை (90), 8.வெஸ்ட் இண்டீஸ் (69), 9.வங்காளதேசம் (66), 10.ஜிம்பாப்வே (51).