Mar 30

ஆஸி.யில் டெபி சூறாவளியால் வெள்ள அனர்த்தம்; 1,000 பாடசாலைகள் மூடப்பட்டன

 அவுஸ்திரேலியாவை தாக்கிய டெபி சூறாவளியால் ஏற்பட்ட  வெள்ள அனர்த்தம் காரணமாக தென் கிழக்கு குயீன்ஸ்லாந்து பிராந்தியத்திலுள்ள அனைதபுதப் பாடசாலைகளும் வியாழக்கிழமை மூடப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் அந்தப் பிராந்தியத்திலுள்ள 1,000  க்கு மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

இந்த அனர்த்தத்தால் எவரும் காயமடைந்ததாக இதுவரை அறிக்கையிடப்படவில்லை.

இதனை மோசமான இயற்கைச் சீற்றங்களிலொன்றாக  அந்நாட்டுப் பிரதமர் மல்கொம் டேர்ன்பல் குறிப்பிட்டுள்ளார்.