Mar 30

விமானி பயணத்தின் இடைநடுவில் மரணம்

அமெரிக்கன் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள டலஸ் நகரிலிருந்து நியூமெக்ஸிக்கோ மாநிலத்திற்கு நேற்று புதன்கிழமை பயணத்தை மேற்கொண்ட அமெரிக்க  எயார்லைன்ஸ் விமானத்தின் விமானியொருவர்  பயணத்தின் இடைநடுவில் மரணமாகியுள்ளார்.

தரையிறங்குவதற்கு இரு மைல் தூரம் இருந்த நிலையில்  மேற்படி போயிங் 737 -800  விமானத்தில்  குறிப்பிட்ட விமானியான  வில்லியம் மைக் கிரப்ஸ்  தொடர்பில் மருத்துவ அவசரகால நிலைமையொன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து துணை விமானிகளால் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பயணிகள் எவரும் காயமடையவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.