Aug 02

பெண்கள் அதிகம் காதலிக்கும் மோட்டார் சைக்கிளாக முதலிடத்தில் உள்ளது YAMAHA-Z

யமஹா(YAMAHA) பைக் சில வருடங்களுக்கு முன்னர்பாவனைக்கு தரமானது என பலராலும் விரும்பி வாங்கப்பட்டது.

ஆனால் காலப்போக்கில் ரீ.வி.எஸ்(TVS) ஸ்கூட்டி(SCOOTY) வெகோ(WAGO) என்பன யமஹாவை(YAMAHA) வீழ்த்தி முன்னிலை வகித்தன. ஆனால் இப்பொழுது மீண்டும் பாவனையில் மட்டுமின்றி அழகிலும் கவரும் வகையில் உருவெடுத்து முன்னிலை வகிக்கின்றது யமஹா(YAMAHA).

அந்த வகையில் பெண்கள் விரும்பி வாங்குகின்ற மோட்டார் வண்டியாக யமஹா(YAMAHA) உள்ளது. தற்பொழுது இலங்கையை பொறுத்தவரையிர் 2இலட்சத்து 60ஆயிரம் ரூபா விற்பனையில்  ரீ.வி.எஸ்(TVS) இன் வெகோவின் விலையிலும் அதிகமாக விற்கப்பட்டாளும் விற்பனையில் அமோகமாக முன்னிலையில் உள்ளது யமஹா-Z (YAMAHA-Z).

அத்தோடு கறுப்பு, வெள்ளை, ஊதா, சிவப்பு, இரு கலர் கலந்த நிறம், மையில் பச்சை, என பல்வேறு கலர்களிலும் சந்தைகளில் விற்பனைக்குள்ளது YAMAHA.

இந்த நிலையில் குறித்த பைக் பிளாஸ்ரிக் வேலைப்பாடுகளை அதிகம் கொண்டது என்பதனால் ஓட்டுவதற்கு இலகுவானதாக உள்ளதோடு. உடைந்தாலும் சுப்பக்கப் போன்று பாகங்களை ஒவ்வொன்றாக கலட்டி மாத்திக் கொள்ள முடியும்.

அத்துடன் பாரம் குறைவென்பதால் வெட்டி ஓடுவதற்கு இலகு. அதனால் பெண்களுக்கு ஓட்டுவது மிக இலகவாக உள்ளமையே யமஹாவை(YAMAHA) பெண்கள் விரும்புவதற்கு ஒரு காரணம். இலகுவாக ஓட்ட முடிவதால் விபத்துக்களில் இருந்தும் பாதுகாப்பை பெறமுடியும்.

மேலும் குறித்த பைக் 110CC கொண்டதாக 500ரூபாய் பெற்றோலை கொள்வனவு செய்யும் வகையிலும் உள்ளதோடு பார்ப்பதற்கு அழகில் பெண்கள் ஓட்டும் ஏனைய மோட்டார் சைக்கிள்களை பின்தள்ளியிருப்பதே யமஹாவை(YAMAHA) பெண்கள் அதிகம் விரும்புவதற்கு காரணமாக உள்ளது.