Mar 30

நாசாவுடன் இணைந்தது இஸ்ரோ

வேளாண்துறை கால நிலை மாற்றம் உள்ளிட்டவற்றை கண்காணிப்பதற்காக, நாசாவுடன் இணைந்து 'நிசார்' எனும் நுண்துளை ரேடார் செயற்கைக் கோள் ஒன்றை இஸ்ரோ உருவாக்கி வருகிறது.

இரட்டை அலைவரிசை கொண்ட 'நிசார்' எனும் நுண்துளை ரேடார்  செயற்கைகோளானது, இயற்கை வளங்களை கண்காணித்தல், வேளாண்துறையில் மண்ணின் ஈரப்பதம் அறிதல், வெள்ள இடர்பாட்டை முன்கூட்டியே அறிதல், கடலரிப்பு, கடலோர மாற்றங்கள், மாறிவரும் காற்று மற்றும் கடல் நீரோட்டம் ஆகியவற்றை கண்காணிக்கும் பணிக்கு உதவும்.