Aug 02

விற்பனையில் வரலாற்று சாதனை படைத்த மாருதி சுஸூகி

இந்தியாவில் மாருதி சுஸூகி விற்பனையில் முதலிடத்தில் உள்ள நிலையில் கடந்த மாதம் விற்பனையில் 21 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த மாதம் 1, 65, 346 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. மாருதியின் வரலாற்றில் மாத விற்பனையில் இவ்வளவு கார்களை விற்றது இது தான் முதல் தடவையாகும்.

மேலும் கடந்த மாதம் மொத்த வாகன விற்பனையில் 21சதவீதம் வளர்ச்சி பெற்றள்ளதாகவும். ஜூலை மாதம் ஏற்றுமதியான வாகனங்களின் எண்ணிக்கை 11,345 ஆன இருந்தது என்றும் மாருதி சுஸூகி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.