Mar 30

இலங்கைக்கு கடத்த முயன்ற 100 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற 100 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்செய்யப்பட்டன.


இராமேஸ்வரத்தைச் சேர்ந்த முருகலிங்கம் என்பவரை  கைதுசெய்த கடலோர பாதுகாப்புக் குழும பொலிஸார், அவரிடம் இந்த கடத்தல் குறித்து விசாரித்து வருகின்றனர். இராமேஸ்வரத்தில், கடல் அட்டை கடத்தல் தொடர்ந்துவருகிறது.

கடல் அட்டை, கடல் குதிரை, ஆமை உள்ளிட்ட 53 வகை மீன் இனங்களைப் பிடிக்க மத்திய அரசு தடை விதித்திருந்தது. ஆனால், இராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் கடல் அட்டை பிடிப்பது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.


பொலிஸாரும் இந்தக் கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். சமீபத்தில், கடல் அட்டையைக் கடத்திவந்த வான் ஒன்று விபத்தில் சிக்கியது. சாரதி  தப்பித்துவிட்டார்.

சம்பவ இடத்துக்கு பொலிஸார் வந்து வாகனத்தை மீட்டு சோதனை நடத்திய பின்னரே, வாகனம் முழுவதும் கடல் அட்டைகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.