Mar 30

பூர்வீக கிராம மக்களை நேரில் பார்வையிட்ட சுமந்திரன் எம்.பி

கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த கிராமத்தையும் வீடுவாசல்களையும் கையகப்படுத்தி நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்கவேண்டும் எனக்கோரி 30வது நாளாக போராட்டத்தில் ஈடுபடும் மக்களை கூட்டமைப்பு எம்.பி. எம்.ஏ. சுமந்திரன் இன்றைய தினம் நேரில் பார்வையிட்டார்.

இதன்போதுகேப்பாபுலவு காணி விடுவிப்பு தொடர்பில் நானும் கூட்டமைப்பின் தலைவர்  சம்பந்தனும்  ஜனாதிபதியிடம் பேசினோம்.  அவர் உங்களின் ாணிகளை விடுவிக்கலாம் என தெரிவித்துள்ளார். 

ஆனால் அது எவ்வளவு காலம் எடுக்கும் என்பது தெரியவில்லை  என்று அவர் தெரிவித்தார்.