Mar 30

முல்லை.வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றிணைந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமக்கு வேலைவாய்ப்பினை உடன் வழங்கவேண்டும் என   வலியுறுத்தி வடக்கு மாகாண பட்டதாரிகள் கடந்த ஒருமாதகாலமாக தொடர்ந்து போராடிவருவதாக்வும் இதுவரையில் இதற்கு நல்லதொரு தீர்வு வழங்கப்படவில்லை எனவும் இதனால் வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும்  குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தனர்.


இதனை தொடர்ந்து தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரிடம் ஒப்படைப்பதற்காக முல்லை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளரிடம் ஒப்படைத்திருந்தனர்.