Aug 01

நியூ பிரவுன்ஸ்விக்கிலும் மக்கள் இடம்பெயர்வு

பிரிட்டிஷ் கொலம்பியாவில் தொடர்ந்துவரும் காட்டுத்தீ அனர்த்தம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், நியூ பிரவுன்ஸ்விக் மாநிலத்திலும் தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத்தீயினால் மக்கள் இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

நியூ பிரவுன்ஸ்விக்கின் வட பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த காட்டுததீ காரணமாக, அந்த பிராந்தியத்தைச் சேர்ந்த சுமார் 25பேரை உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

நியூ பிரவுன்ஸ்விக்கின் மிஸ்கொ ஐலன்ட் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ கட்டுப்பாட்டுக்கு அப்பால் வேகமாக பரவி வருவதாகவும், நேற்று மாலை வரையிலான நிலவரப்படி சுமார் 90 ஹெக்டேயர் நிலப்பகுதி காட்டுத்தீக்கு இரையாகி விட்டதாகவும் மாநில காட்டுத்தீ கட்டுப்பாட்டு தலைமை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் பெருளவான தீயணைப்பு படையினர் தீப்பரவலை கட்டுப்படுத்த போராடி வருவதாகவும், அவர்களுக்கு உதவியாக ஆகாய மார்க்கமாகவும் உலங்குவானூர்திகள் மூலம் நீர் தெளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

சனிக்கிழமை மாலை நான்கு மணியளவில் ஆரம்பமாக காட்டுதீ, மிக வேகமாகவே பெருமளவு பிரதேசங்களுக்கு பரவிவிட்டதாகவும், தற்போதைக்கு பரவல் வேகம் ஓரளவு மெதுவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை அந்த பகுதியில் 20 வீடுகளைச் சேர்ந்தோர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், வீடுக்ள தீக்கிரையான சம்பவங்களும் சிறிதளவில் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.