Mar 30

இராணுவ தலைமை அதிகாரியாக மேஜர் மகேஸ் பதவியேற்பு

இலங்கை இராணுவத்தின் 50-வது தலைமை அதிகாரியாக, மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நேற்று அதிகாரபூர்வமாகப் பதவியேற்றார். இராணுவத் தலைமையகத்தில் நேற்று காலை, பௌத்த மதகுருமாரின் ஆசி வழங்கும் நிகழ்வுடன் இந்தப் பதவியேற்பு இடம்பெற்றது.

இராணுவத்தின் பிரதித் தலைமை அதிகாரி  மேஜர் ஜெனரல் ரேனக உடவத்த உள்ளிட்ட உயர்நிலை இராணுவ அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இராணுவத் தலைமை அதிகாரியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக கடந்த மாத இறுதியில் ஓய்வு பெற்றதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றியிருந்த மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.