Mar 30

காணி விடுவிப்பு: ஜனாதிபதி - சம்பந்தன் பேச்சில் முடிவில்லை

காணி­கள் விடு­விப்­புத் தொடர்­பாக அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­த­னுக்­கும் இடையே அரச தலை­வர் செய­ல­கத்­தில் சந்­திப்பு நடை­பெற்­றது.

எனினும் முடி­வு­கள் எது­வும் எடுக்­கப்­ப­ட­வில்லை என்று தெரிய வரு­கின்றது. புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பில் அனைத்­துக் கட்­சித் தலை­வர்­க­ளுக்­கும், அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கும் இடையே அரச தலை­வர் செய­ல­கத்­தில் நேற்று முன் தினம் இரவு சந்­திப்பு நடை­பெற்­றது. இந்­தச் சந்­திப்பு முடி­வ­டைந்த பின்­னர், அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை, தனி­யா­கச் சந்­தித்­துப் பேச வேண்­டும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் கோரி­யுள்­ளார்.

இதற்­க­மை­வாக தனி­யான சந்­திப்பு நடை­பெற்­றது. அந்­தச் சந்­திப்­பில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர்.

“கேப்­பா­பி­லவு, வலி.வடக்கு உள்­ளிட்ட இரா­ணு­வத்­தின் பயன்­பாட்­டில் உள்ள காணி­கள் விடு­விக்­கப்­பட வேண்­டும் என்­றும், அதற்­கான நியா­யப்­பா­டு­க­ளை­யும் இரா.சம்­பந்­தன் அரச தலை­வ­ரி­டம் முன்­வைத்­தார்.

கேப்­பா­பி­லவு காணி தொடர்­பில் இரா­ணு­வத் தள­ப­தி­யு­டன் உட­ன­டி­யா­கவே அரச தலை­வர் பேசி­னார். இரா­ணு­வத்­தி­ன­ரின் கட்­டுப்­பாட்­டில் உள்ள பொது­மக்­க­ளின் அனைத்­துக் காணி­க­ளும் விடு­விக்­கப்­ப­டும். அதனை எப்­போது எந்த அள­வில் விடு­விப்­பது என்­ப­தி­லேயே பிரச்­சினை இருப்­ப­தாக அரச தலை­வர் பதி­ல­ளித்­தார்’ என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­துள்ளார்.