Mar 30

சிறுநீரக நோயினால் முன்னாள் போராளி மரணம்

முல்லைத்தீவு மாவட்டம் தேறாங்கண்டல்ப் பகுதியில் வசித்து வரும் முன்னாள் போராளி  ஒருவர் சிறுநீரக நோயின் காரணமாக கடந்த திங்கட் கிழமை  கிளிநொச்சி வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

முருகேசு- யசோதரன் , வயது - 37 என்னும் இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள தேறாங்கண்டல் கிராமத்தில் வணிக்கும் குறித்த முன்னாள் போராளி சிவில் பாதுகாப்பு பிரிவில் இணைந்து பணியாற்றிய நிலையில் சிறுநீரக நோய்த் தாக்கத்துக்கும் உள்ளாகியிருந்தார்.

குறித்த முன்னாள் போராளி விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த காலத்தில் பட்ட விழுப்புண் காரணமாக ஓர் சிறுநீரகம் பாதிப்படைந்திருந்த்து. இதன் காரணமாகவே இரண்டாவது சிறுநீரகமும் பாதிப்படைந்த்துள்ளது. குறித்த முன்னாள் போராளிக்கு உரிய சிகிச்சை அளித்திருப்பின் பாதுகாத்திருக்க முடியும் என வைத்தியர்கள் கூறுயதோடு சத்திர சிகிச்சைக்கும் பரிந்துரைத்திருந்தனர்.

இச் சத்திர சிகிச்சைக்காக உறவினர் ஒருவர் ஓர் சிறுநீரகத்தினை வழங்க முன்வந்திருந்தபோதும் இவற்றிற்கான செலவுகள் அதிகம் எனக் கூறப்பட்ட நிலையில் அதற்கான நிதியின்மை காரணமாகவே காலம் தாழ்த்தப்பட்டிருந்த்து. இவர்களின் குடும்ப வறுமையின் காரணமாக கணவனும் மணைவியும் சிவில் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் வருமாணத்திலேயே வாழ்வாதாரம் செல்லும் நிலையில் இவ்வாறான பாரிய சிகிச்சைக்கு போதிய நிதி இன்மை காரணமாகவே காலம் தாழ்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திங்கட் கிழமை திடீரென மயக்க முற்ற முன்னாள் போராளியை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோதும் உயிரிழந்துள்ளார்