Jul 29

தொலைதூர தீவில் 40 ஆண்டுகள் தனித்துவாழும் பெண்

கனடா அருகே அமைந்துள்ள 26 மைல்கள் நீளம் கொண்ட சாபெல் தீவில் கடந்த 40 ஆண்டுகளாக பெண்மணி ஒருவர் தனித்து வாழ்ந்து வருவதாக கூறப்படகின்றது. 67 வயதாக ஜோ லுகாஸ் என்ற குறித்த பெண், தன்னை ஒரு இயற்பியலாளர் என்று தெரிவிக்கிறார்.

அதுமட்டுமின்றி குறித்த தீவில் 400 குதிரைகளும் 350 பறவை இனங்களும் தன்னுடன் வாழ்வதாகவும் அதனால் தனித்து வாழ்வதாக இதுவரை தோன்றவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சாபெல் தீவில் அராய்ச்சி ஒன்றிற்காக தனது 21 வயதில் முதன்முறையாக வந்ததாகவும் அதன்போது, தீவுப் பகுதியளிலிருந்த குதிரை இனங்களை பார்த்து தனது திட்டங்களை மாற்றிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

சாபெல் தீவு வருடம் ஒன்றுக்கு 125 நாட்கள் பனியால் முடியிருக்கும் என்று கூறப்படுகின்றது.

இங்கு கைவிடப்பட்ட நிலையிலுள்ள கட்டடம் ஒன்றில் வாழ்ந்துவரும் ஜோ லுகாஸ் வாரத்துக்கு ஒருமுறை தமக்கு தேவையான உணவு பொருட்களை வரவழைத்துக் கொள்கிறார்.

கனடாவின் ஹலிபக்ஸ் மாவட்டத்தின் ஒருபகுதியாகவே இந்த தீவினை அரசு ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. ஆனாலும் கனடாவுடன் எந்த தொடர்பும் இன்றி தனித்தே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.