Mar 30

யாழ் மாவட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை ஒன்றால் அதிகரிப்பு

பதுளை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படக் கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு தேர்தல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதேநேரம் இதற்குப் பதிலாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படக் கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார்.

அதன்படி பதுளை மாவட்டத்தில் இதுவரை இருந்த 09 உறுப்பினர்கள் என்பது 08 உறுப்பினர்களாக குறைக்கப்படும் அதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை இருந்த 06 உறுப்பினர்கள் என்ற நடைமுறை 07 உறுப்பினர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டுக்குறிய தேர்தல் இடாப்பின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.