Jul 28

கதறும் பிஞ்சு குழந்தைகள்.. உலகிலிருந்து விடைபெற்ற இளம் தாய்!!!!

புற்றுநோயுடன் வெகுநாட்களாக போராடி வந்த இரண்டு குழந்தைகளின் தாய் மரணமடைந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்தவர் Louise Smith (24) இவருக்கு Cole (5) Stephen (2) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Stephen கடந்த 2015ல் பிறந்துள்ளான். அவன் பிறந்த அடுத்த மாதத்திலேயே Louise-க்கு உடல்நல கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவ பரிசோதனையை அவர் மேற்கொள்ள புற்றுநோய் Louise-ஐ தாக்கியிருப்பது தெரியவந்தது.

கடந்த இரண்டு வருடங்களாக புற்றுநோயுடன் போராடி வந்த Louise கடந்த வாரம் புதன்கிழமை மரணமடைந்தார்.

Louise-ன் மரணத்தால் அவரின் இரு குழந்தைகளும் தாயை இழந்து தவித்து வருகிறார்கள்.

தனக்கு ஏற்பட்ட பிரச்சனை யாருக்கும் வரக்கூடாது என்ற நோக்கில் Louise உயிருடன் வாழ்ந்த நாட்களில் புற்று நோய் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.

இது குறித்து Louise முன்னர் கூறுகையில், புற்றுநோயால் எனக்கு ஏற்பட்டுள்ள அனுபவம் குறித்து பேசும் போது அது மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

நான் மக்களுக்கு சொல்வது என்னவென்றால் உங்கள் உடலில் எதாவது அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்.அது புற்றுநோயாக கூட இருக்கலாம் என கூறியுள்ளார்.

Louise இறப்புக்கு பின்னர் அவர் தாய் Marie கூறுகையில், Louise-ன் கடினமான நேரங்களில் குடும்பத்தினரும், நண்பர்களும் துணையாக இருந்தார்கள்.

அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

Louise-ன் நெருங்கிய தோழியான Jennifer தனது பேஸ்புக் பக்கத்தில், நாம் ஒன்றாக இருந்த தருணங்களை எப்போதும் நினைவில் வைத்து மகழ்வேன். நீ என்னுடைய நெருங்கிய தோழிகளில் ஒருத்தி என கூறுவது எனக்கு எப்போதும் சிறப்பானதாகும் என பதிவிட்டுள்ளார்.