Mar 29

கோட்டை ரயில் நிலைய குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

2008ம் ஆண்டு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் தற்கொலைக் குண்டு தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்ட குற்றவாளி ஒருவருக்கு கொழும்பு விஷேட மேல் நீதிமன்றத்தால் 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு விஷேட மேல்நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்கவினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. 

2008ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 03ம் திகதி விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியிருந்ததுடன், இத்தாக்குதலில் கொழும்பு டீ.எஸ். கல்லூரியின் 08 மாணவர்கள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்திருந்தனர்.

அதன்படி குண்டு ஒன்றை வெடிக்கச் செய்வதற்கு திட்டமிடல், அதற்கு உடந்தையாக இருத்தல் போன்ற குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியான கனகசபை தேவதாசன் என்ற தமிழர் ஒருவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.