Mar 29

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விமல் வீரவன்ச மாற்றம்

சிறைச்சாலையின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வீரவன்ச, இன்று 8 ஆவது நாளாகவும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.  தனக்குப் பிணை வழங்கக்கோரி, கடந்த 21ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர், கடந்த 26ஆம் திகதியன்று சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஆட்சியின்போது, அரச வாகனங்களை முறை கேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட விமல் வீரவன்ச, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.