Mar 29

மனோதிடம் கொண்ட சர்வதேச பெண்மணி: சந்தியாவுக்கு அமெரிக்க விருது

ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களம் ஒவ்வொரு ஆண்டும் மனித உரிமை நீதி சமாதானம் மற்றும் பால்நிலை சமத்துவம் என்பவற்றுக்காக செயற்படும் பெண்களின் மனோதிடத்திற்கும் கடப்பாட்டிற்கும் அங்கீகாரமளித்துவருகிறது. இன்று, இலங்கையின் சந்தியா எக்நெலிகொட ஐக்கிய அமெரிக்க இராஜாங்க செயளாலரின் 2017ம் ஆண்டுக்கான “மனோதிடம் கொண்ட சர்வதேச பெண்மணி” என்னும் விருதை பெற்றுக்கொள்வதற்காக உலகின் பல்வேறு நாடுகளைச்சேர்ந்த மேலும் பன்னிரண்டு பெண்களுடன் இணைந்துள்ளார். 

திருமதி எக்நெலிகொட அவர்கள் தனது கணவனுக்காகவும் இலங்கையின் பல்வேறு இன மத சமூகங்களைச் சார்ந்த காணாமல் போனோர்களது குடும்பங்களுக்காகவும் சளைக்காமல் தொடர்ந ;து செயற்பட்டமைக்காக முதல் பெண்மணி மிலானியா ட்ரம்ப் மற்றும் அரசியல் விவகாரங்களுக்கான இராஜாங்க உதவிச் செயலாளர் தோமஸ் யு செனோன் அவர்களும் திருமதி எக்நெலிகொட அவர்களுக்கு இப்பரிசினை வழங்குவார்கள்.

"தமது அன்புக்குறிய காணாமல் போனோரின் தகவல்களைத் தேடிக்கொண்டிருக்கும் இலங்கையின் சகல இனத்தையும் சார்ந்த பெண்களின் கடப்பாட்டினையும் விடாமுயற்ச்சியையும் திருமதி சந்தியா பிரதிநிதித்துவப் படுத்துகின்றார். இலங்கைவாழ் அனைவருக்கும் உண்மை, மீளிணக்கம், மற்றும் நிலையான சமாதானம் நிறைந்த பிரகாசமான எதிர்காலத்தை நோக்கிய முதல்படியென அவர்களின் முயற்சிகளுக்கு அமெரிக்க மக்கள் ஆதரவளிப்பார்கள்”; என்று இலங்கைக்காண ஐக்கிய அமெரிக்க தூதுவர் அடுல் கேசாப் குறிப்பிட்டார்.

2010ம் ஆண்டு அவரது கணவர் பிரகீத் காணாமல் போனது முதல், தீங்கிழைத்தவர்கள் பொறுப்புக் கூறும் வகையிலும் தமது கேள்விக்கு விடைதேடும் வகையிலும் சந்தியா 90 தடவைக்கு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட கிழக்கு மாகாணங்கள் உட்பட காணாமல் ஆக்கப்பட்டு பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கு உதவுவதற்காக இலங்கையின் சகல பாகங்களுக்கும் வழமையான பயணங்களை மேற்கெண்டிருந்தார்.

சந்தியா தமது பரப்புரை தொடர்பாக கூறும்பொழுது “உண்மையைத் தேடுவது ஒரு குற்றச்செயல் அல்ல” தீங்கிழைத்தவர்களைப் பாதுகாப்பதுதான் குற்றமாகும்” என்று கூறினார். கௌரவிக்கப்படும் இப் 13 பேறும் பாலர்வயது திருமணம், பாலியல் வன்முறைகள், மானிட வர்த்தகம் என்பவற்றுக்கு எதிராக போராடியவர்கள், மதநம்பிக்கைகளுக்கிடையில் உறவை வளர்த்தல், சூழலைப் பாதுகாத்தல் போன்ற பல்வேறு பிரச்சிணைகளில் அவர்களது பரப்புரைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் பல்வேறு நகரங்களுக்குச் சென்று தாங்கள் முகங்கொடுத்த சவால்களையும் செயல்படக்கூடியவகையில் மற்றவர்களைக் கவர்ந்திலுக்கக் கூடியவகையிலும் கலந்துரையாடல்களில் ஈடுபடுவார்கள். 

2007ம் ஆண்டு இவ்விருது வழங்கள் ஆரம்பிக்கப்பட்டது முதல், உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்களுக்காக பரப்புரைகளில் ஈடுபட்ட புத்தளத்தைச் சேர்ந்த ஜான்சிலா மஜீத் அவர்களுக்கு 2010ம் ஆண்டு வழங்கப்பட்ட விருதுடன் 60 க்கு மேற்பட்ட பல்வேறு நாடுகளைச்சேர்ந்த சுமார் 100 பேர் இராஜாங்க திணைக்களத்தினால் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

“தர்க்கரீதியான தலைமைத ;துவத்தையும் மனோதிடத்தையும் எப்போதும் விட்டுக்கொடுக்கக் கூடாது” தற்சமயம் எவ்வாரான பிரச்சணைகளுக்கு முகங்கொடுத்தாலும் பரவாயில்லை, உங்களுக்கு அனுகூலமான ஏதோ உங்களுக்காக சேமிக்கப்படுகின்றது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே முக்கியம்" என சந்தியா கூறினார்.